#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
"எங்க சொருவுவீங்க? எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்!" நிக்சனை வெளுத்து வாங்கிய கமல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது 7வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்த முறை நிகழ்வில் விசித்ரா, நிக்சன், வி ஜே அர்ச்சனா, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஆயிஷா, விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரண்டு வீடுகள் உள்ளன.
இந்நிலையில் தற்போது 'கலாட்டா கல்லூரி' டாஸ்கில் டீச்சரான அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று கூறினார். அப்போது விசித்ரா, மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் ஒரே கேங் என்று கூறி அனைவரையும் விமர்சித்தார்.
அப்போது ஒரு சமயத்தில் எல்லை மீறிய நிக்சன் "மூஞ்சிய பாரு நாயே. சொருவிருவேன்" என்று கூறினார். இதற்கு கமல் நிக்சனிடம், "சொருவிருவேன்னு சொன்னீங்களே . எங்க சொருவுவீங்க ன்னு எனக்கு இப்ப தெரிஞ்சாகணும்." என்று கண்ணை விரித்துக் காட்டி கோபமாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.