சினிமா

நான் கடவுள் புகழ் பூஜாவா இது- எப்படி மாறிட்டாருனு பாருங்க! புகைப்படம் இதோ.

Summary:

latest photo for actress pooja

தமிழில் ஜே.ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை பூஜா.மேலும் இவர் அஜித், மாதவன், ஆர்யா என பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது நடிகை பூஜா, தமிழ், தெலுங்கு, சிங்களம், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடிகையாக வலம் வந்துள்ளார்.

 ஜே ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா.

1984ஆம் ஆண்டு கொழும்புவில் பிறந்தவர் பூஜா. இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்துள்ளார். பெங்களூரில் மவுண்ட் கார்மல் காலேஜில் பி.காம் படித்தார். அதன்பின்னர் வால்பாறையில் உள்ள ஹிந்துஸ்தான் படித்தார்.அதன் பிறகு ஒரு கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய நண்பர் இயக்குனர் ஜீவா பூஜாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.அதன் பிறகுதான் பல ஹிட்டான தமிழ் படங்களில் பூஜா நடித்துள்ளார். 

தொடர்புடைய படம்

அதன் பிறகு இலங்கைத்தமிழரின் திருமணம் செய்து கொண்ட நடிகை பூஜா. திருமணத்திற்குப் பிறகு தமிழில் அதிக பட வாய்ப்புகள் வராததால் சிங்கள மொழியில் நடித்து வருகிறார்.

வெகு நாட்களுக்குப் பிறகு நடிகை பூஜா தற்போது தனது புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement