இளைய தளபதி விஜய்க்கு மனைவியின் மீது இவ்வளவு காதலா.. மனைவிக்காக என்ன செய்தார் தெரியுமா.?



Latest news update about vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் 90களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் திரை துறையில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியிருக்கிறார்.

vijay

ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தையின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து இருந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் விஜய். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர் வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் இன்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதா மீது விஜய்க்கு எந்த அளவு காதல் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக தற்போது இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

vijay

அதாவது விஜயின் மனைவி சங்கீதாவிற்கு ஏ எல் விஜய் இயக்கிய 'தெய்வத்திருமகன்' திரைப்படம் மிகவும் பிடிக்குமாம். இதனால் ஏ எல் விஜயுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என விஜயிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு சம்மதித்து மனைவிக்காக ஏஎல் விஜியுடன் இணைந்து 'தலைவா' படத்தில் நடித்தாராம். இச்செய்தி இணையத்தில் தீயாய் பரவி மனைவியின் மீது விஜய்க்கு இவ்வளவு காதலா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.