"கேப்டன் விஜயகாந்த் பற்றி தெரியாத விஷயங்கள்!" ஆச்சரியத்தில் ரசிகர்கள்..

"கேப்டன் விஜயகாந்த் பற்றி தெரியாத விஷயங்கள்!" ஆச்சரியத்தில் ரசிகர்கள்..


Latest news about vijaykaandh

1979ம் ஆண்டு "அகல் விளக்கு" என்ற படத்தில் அறிமுகமானவர் விஜயகாந்த். இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர், பெரும்பாலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் ஆக்ஷன் படங்களில் தான் நடிப்பார். மேலும் 2011 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

Vijayakandh

தற்போது உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஒரு நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதராகவும் இருந்துள்ளார். தான் சாப்பிடும் உணவை தனக்கு கீழ் வேலை செய்பவரும் சாப்பிட வேண்டும் என நினைப்பாராம்.

தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நேரடியாக பணம் கொடுத்தால் வாங்க மறுப்பவர்களுக்கு, சீட்டாடி அதில் தோற்பது போல் பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிடுவாராம். இன்று தமிழ் சினிமாவில் உச்சியில் இருக்கும் விஜய், சூர்யா ஆகியோருக்கு ஆரம்பகாலத்தில் ஒரு ஏணியாக இருந்துள்ளார் விஜயகாந்த்.

Vijayakandh

மேலும் மன்சூர் அலிகான், பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட பல நடிகர்களை வளர்த்துவிட்டுள்ளார் விஜயகாந்த். மேலும் இக்கட்டான நேரங்களில் அவர்களுக்கு பண உதவியும் செய்துள்ளாராம். தன்னுடன் இருக்கும் யாரும் சாப்பிடாமலே இருக்க கூடாது என்பதில் மிகுந்த அக்கறை உள்ளவர் விஜயகாந்த்.