பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
திரையரங்கில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட நடிகர் கார்த்தி.. என்ன காரணமென்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிடுவீங்க.?
திரையரங்கில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட நடிகர் கார்த்தி.. என்ன காரணமென்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிடுவீங்க.?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. முன்னணி நடிகரான சூர்யாவின் சகோதரனும், சிவகுமாரின் மகனுமான நடிகர் கார்த்தி பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே இவருக்கு அதிகம்.
நடிகர் கார்த்தி முதன் முதலில் 'பருத்திவீரன்' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ப்ரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இப்படத்தில் இவரின் நடிப்பிற்காகவும், பிரியாமணி நடிப்பிற்காகவும் தேசிய விருது கிடைத்தது.
இதன் பிறகு தொடர்ந்து தமிழில் பல வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதுபோன்ற நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் அவரது நண்பர்கள் திரையரங்கிற்கு சென்றபோது திரையரங்க நிர்வாகம் துரத்தியடித்தது என்னும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கார்த்தி மற்றும் அவருடைய நண்பர்களும் இணைந்து மும்பையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்றுருக்கின்றனர். மும்பையில் திரையரங்கங்கில் நடனம் ஆடினால் அங்கிருந்து வெளியே அனுப்பிவிடுவார்கள். அதை போல் கார்த்தி மற்றும் நண்பர்கள் நடனம் ஆடியதற்கு திரையரங்க நிர்வாகம் அவர்களை வெளியே துரத்தி விட்டது செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது.