BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை லட்சுமி மேனன்... வைரல் புகைப்படத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்.!
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் கும்கி.இப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை லட்சுமிமேனன். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்திருந்தார். பின்னர் சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர் அண்மையில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக சன் டிவியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது நடிகர் யோகி பாபுவுடன் சேர்ந்து மலை என்ற படத்தில் லட்சுமி மேனன் நடித்து வருகிறார். அந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன. அதனை பார்த்த ரசிகர்கள் என்ன யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை லட்சுமி மேனன் என கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.அதாவது லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து மலை கிராமத்திற்கு மருத்துவராக வரும் பெண்ணாக நடிக்கிறார் என்றும் யோகி பாபு உடன் அவர் ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறி இருக்கிறார்.