சினிமா

சிரிப்பிலேயே ரசிகர்களை கட்டியிழுத்த லைலா தற்போது எப்படியிருக்கார் பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

Summary:

laila latest photo viral

தமிழ் சினிமாவில் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லைலா. அதனைத் தொடர்ந்து தனது சிரிப்பினாலேயே ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் முன்னணி நடிகர்களான விஜயகாந்த்,சரத்குமார், அஜித், சூர்யா, விக்ரம், பிரபு தேவா என பலருடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஏராளமான ஹிட் படங்களில் நடித்த அவர் கண்ணகுழியழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்டார். அதனை தொடர்ந்து லைலா 2006-ம் ஆண்டு மே 17-ம் நாள் ஈரான் நாட்டு தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

அதனை தொடர்ந்து சினிமாவிற்கு  முழுக்கு போட்டுவிட்டு லைலா தனது குடும்பத்தை கவனித்து வந்தார். பின்னர் அதனை தொடந்து சமீபகாலமாக அவர் விளம்பரங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார். அதனை தொடர்ந்து படங்களில் நடிப்பார் எனவும் ரசிகர்களா ல் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒருகாலத்தில் சிரிப்பாலேயே ரசிகர்களை கட்டி இழுத்த நடிகை லைலா சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement