ஆரம்பமே வேற லெவல்! ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம்!! பிரம்மாண்டமாக நடைந்த பூஜை! வைரல் புகைப்படங்கள்!!

ஆரம்பமே வேற லெவல்! ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம்!! பிரம்மாண்டமாக நடைந்த பூஜை! வைரல் புகைப்படங்கள்!!


Laal salam pooja stills viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம்வரும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லைகா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு லால் சலாம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளது.

மேலும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் அவர் நடிக்கும் காட்சிகள்  20 நிமிடங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று லால் சலாம் படத்தின் பூஜை மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்றுள்ளது. அதில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன், ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.