குஷ்பு என்ன இவ்வளவு ஒல்லியா மாறிட்டாரு!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!!

குஷ்பு என்ன இவ்வளவு ஒல்லியா மாறிட்டாரு!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!!


Kushbu fat to slim viral photos

உடல் எடை குறைந்து பார்க்க மிகவும் ஒல்லியாக மாறியுள்ள நடிகை குஷ்புவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை குஷ்புவுக்கு அறிமுகமே தேவை இல்லை. அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர்.  ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் கொடிகட்டி பரந்த இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

kushbu

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கி, முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தற்போது பாஜக வில் இணைந்துள்ளார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில்கூட பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை சந்தித்தார்.

இப்படி சினிமா, குடும்பம், அரசியல் என பயங்கர பிசியாக இருந்துவரும் குஷ்பு சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

காரணம், உடல் எடையை குறைத்து பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக காட்சியளிக்கிறார் குஷ்பு. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.