சினிமா

கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுக்கு அப்பாவாகும் முக்கிய பிரபலம்! யார்னு பார்த்தீர்களா!! வெளிவந்த மகிழ்ச்சியான தகவல்!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். அவர் தற்போது மலையாளத்தில் இயக்குனர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படத்தின் தமிழ் ரீமேக்கான கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இப்படத்தை தமிழில் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார்.  மேலும் அவரது உதவி இயக்குனராக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இணைத்து இயக்குகின்றனர். மேலும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். அவர்களுடன் யோகிபாபு, பிராங்ஸ்டர் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் . இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கூகுள் குட்டப்பன்  படத்தில் பிக்பாஸ் தர்ஷனின் தந்தையாக பிரபல இயக்குனர் கே எஸ் ரவிச்சந்திரன் நடிக்க உள்ளாராம். இந்த தகவல்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.


Advertisement