தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
யார் அந்த கொலைகாரன்; விஜய் ஆண்டனியா, அர்ஜுனா? விடைகிடைக்கும் நான் வெளியானது

விஜய் ஆண்டனி மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்துள்ள கொலைகாரன் திரைப்படம் ஜூன் ஏழாம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அமைதியாகவும், சாந்தமாகவும் திரில்லான படங்களில் நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது தனது நடிப்புத் திறமையால் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர்போன ஆக்சன் கிங் அர்ஜுன், விஜய் ஆண்டனியுடன் கொலைகாரன் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
தியா மூவிஸ் தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தில் நாசர், சீதா, சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். பிச்சைக்காரன், திமிரு பிடிச்சவன், சைத்தான் போன்ற படங்களைப் போன்றே இந்த படத்திற்கும் கொலைகாரன் என பெயர் வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.
படத்தின் பெயரை வைத்து விஜய் ஆண்டனியின் வழக்கமான படங்களைப் போல இந்தப் படத்திலும் திகில் சம்பவங்கள் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த படத்தில் அர்ஜுன் போலீஸ் அதிகாரியாகவும் விஜய் ஆண்டனி கொலைகாரனாகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் உண்மைதானா என்பதனை வரும் ஜூன் ஏழாம் தேதி படம் வெளியானதும் தெரிந்துவிடும்.
விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த ‘கொலைகாரன்’ திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என்றும், பின்னர் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படம் ஜூன் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Kolaigaran All Set for June 7th Worldwide #Kolaigaranfrom7thJune @vijayantony @akarjunofficial @BoftaM @dhananjayang @simonkking @andrewxVasanth @onlynikil pic.twitter.com/jxWYPaXLu5
— sridevi sreedhar (@sridevisreedhar) June 3, 2019