உனக்கு வேற சீனே கிடைக்கலயா! சமூக இடைவெளி குறித்து நடிகை கிரண் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ..!
தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரமுடன் இணைந்து ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை கிரண். அதனை தொடர்ந்து கமல் ஹாசனுடன் அன்பே சிவம், பிரசாந்த் உடன் வின்னர் மற்றும் அஜித் உடன் வில்லன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த கிரணுக்கு சில நாட்களிலேயே படவாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதன் பிறகு நடிகர் சுந்தர் சி நடிப்பில் வெளியான முத்தின கத்திரிக்காய் என்ற படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜயுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதில் யாரையும் தொடாதீர்கள், சமூக இடைவெளி மேற்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.