என்ன இருந்தாலும் விஜய் மாறி ஆக முடியாது... படக்குழுவினருக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்...



Keerti Suresh gift 10 grams gold coin to dasara team

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோக்களுடன் இணைந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படம் சூப்பர் ஹூட் ஆகும் என படக்குழு எதிர்பார்த்திருக்கின்றனர். 

Keerti Suresh

இந்நிலையில் தசரா படத்தில் பணியாற்றிய 130 பேருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் 10 கிராம் தங்கத்தை கிப்ட்டாக வழங்கி உள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் தன்னுடன் பணியாற்றிய படக்குழுவினருக்கு தங்கத்தை சர்ப்ரைஸ் கிப்ட்டாக வழங்கி இருந்தார். அந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷ்ம் இணைந்துள்ளார்.