நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
சென்னை கடற்கரை மணலில் கீர்த்தி சுரேஷ் செய்த செயல்.. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்த திரைப்படங்களில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
இந்தப் படத்திற்கு பின்பு தற்போது இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது சென்னை கடற்கரை மணலில் ஜீப் ஓட்டுவது போன்ற வீடியோ பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.