வாவ்.. கோலாகல கொண்டாட்டம்! குடும்பத்துடன் செம கியூட்டாக கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்!!

வாவ்.. கோலாகல கொண்டாட்டம்! குடும்பத்துடன் செம கியூட்டாக கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்!!


keerthi-suresh-with-family-photo-viral

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தெலுங்கில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள சர்காரி வாரி பாட்டா திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன் என்ற படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இதற்கிடையில் அண்மைகாலமாக சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தன் அக்காவின் பிறந்த நாளை குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.