சான்ஸே இல்ல.. அந்த மாதிரியெல்லாம் என்னால நடிக்க முடியாது.! நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!

சான்ஸே இல்ல.. அந்த மாதிரியெல்லாம் என்னால நடிக்க முடியாது.! நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!!



keerthi-suresh-talk-about-act-as-glamour

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படம் விரைவில் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

keerthi Suresh

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்ததிலிருந்து இப்போது வரை நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். கவர்ச்சி குறித்து எனக்கென்று எல்லைகளை வைத்துள்ளேன். எந்த காரணத்திலும் அதை மீறி  கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். நான் முன்பு எப்படி நடித்தேனோ அப்படியே நடித்தாலும் ரசிகர்கள் என்னை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.