சினிமா

அம்மா, தங்கையை போல அழகில்லை!! மிகுந்த வேதனையடைந்த கீர்த்தி சுரேஷின் அக்கா! தற்போது எப்படியுள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்து தற்போத

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்து தற்போது இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேலும் இவரது தந்தை சுரேஷ் மலையாளத்தில் பிரபல இயக்குனராக உள்ளார். கீர்த்தி சுரேஷ் கீர்த்திக்கு ரேவதி சுரேஷ் என்ற அக்கா உள்ளார்.

இந்நிலையில் ரேவதி சுரேஷ்  சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது பழைய புகைப்படத்தையும் தற்போதுள்ள புகைப்படத்தையும் பகிர்ந்து உடல் எடை அதிகரித்து தான் பட்ட கஷ்டங்களை குறித்து நீண்ட வரிகளில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் அவர், நான் வாழ்க்கை முழுவதும்  எடை பிரச்சனையுடன் போராடி வருகிறேன். அனைவரும் என் அம்மா மற்றும் தங்கையுடன் ஒப்பிட்டு என்னை விமர்சனம் செய்கின்றனர்.

நான் டீனேஜராக இருந்தபோது எனது அம்மா, தங்கை போல அழகில்லையே என வருந்தினேன். எனக்கு யாருனே தெரியாதவங்க எல்லாம் உடல் எடை குறைப்பதை குறித்து அட்வைஸ் கொடுத்தாங்க.  இந்த நிலையில் நானே என் மீது நம்பிக்கை வைக்காத போது எனது யோகா டீச்சர் தாரா சுதர்ஷன்தான் என்னை மிகவும் நம்பினார். 20 கிலோவிற்கு மேல் எடையை குறைத்துள்ளேன். இந்த சாதனையை எனது குரு தாரா சுதர்ஷனுக்கு அர்ப்பணிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.


Advertisement