பிரபல இயக்குனரை விரட்டி விரட்டி அடித்த கீர்த்தி சுரேஷ்! டாப் நடிகருக்கே விடுத்த எச்சரிக்கை! தீயாய் பரவும் வீடியோ!

பிரபல இயக்குனரை விரட்டி விரட்டி அடித்த கீர்த்தி சுரேஷ்! டாப் நடிகருக்கே விடுத்த எச்சரிக்கை! தீயாய் பரவும் வீடியோ!


keerthi-suresh-post-lastest-video-in-shooting-spot

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது பிசியாக உள்ளார். மேலும் சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் நிதின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இயக்குனர் வெங்கி அட்லுரியை கையில் குடையுடன் துரத்தி துரத்தி அடிக்க செல்கிறார். மேலும் அந்த வீடியோவை நடிகர் நானிக்கு பகிர்ந்து விரைவில் அவருக்கும் அடி இருப்பது போன்று விளையாட்டாக பதிவிட்டுள்ளார். 

இதற்குமுன் ஏற்கனவே அப்படத்தின் ஷூட்டிங் தளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்  குட்டி தூக்கம் போட்டபொழுது நிதின் மற்றும் இயக்குனர் இருவரும் அவருக்கே தெரியாமல் அவருடன் அருகில் செல்பி எடுத்து அதை வெளியிட்டிருந்தனர்.