உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு! இளசுகளை சுண்டியிழுத்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

உங்க ஸ்மைல் கியூட்டா இருக்கு! இளசுகளை சுண்டியிழுத்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!


keerthi-suresh-latest-photos-viral

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவிலேயே டாப் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

கீர்த்தி சுரேஷ் கதைக்கு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் அண்மையில் வெளிவந்த ரஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் குட்லக் சகி என்ற படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது சுடிதாரில் க்யூட்டாக ஸ்மைல் செய்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.