BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"விஜயின் லியோ படத்தை கிண்டல் செய்த கீர்த்தி சுரேஷின் தந்தை!" விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு!
தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். இவரது ஆரம்ப காலங்களில் உருவகேலிக்கு ஆளாகி சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட விஜய், தற்போது தன்னுடைய அயராத உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த "லியோ" திரைப்படம் உலக அளவில் 550கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. திரைத்துறையில் கூட விஜய்க்கு ரசிகர்கள் உண்டு. அப்படி எல்லோரையும் பாராட்டி வரும் இவருக்கு மலையாளத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ விஜயின் லியோ படம் குறித்து கிண்டலாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை லியோ படத்தை விமர்சித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதில் அவர், "லியோ திரைப்படம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரே ஆள் எப்படி 200பேரை அடிக்க முடியும்?இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் உள்ளன. சாமானிய மக்களுடன் இந்தப் படங்களைக் கனெக்ட் செய்யமுடியாது" என்று கூறியிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.