பாஜகவில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தந்தை.!Keerthi Suresh father join in BJP

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பாஜகவில் இணைந்துள்ளார்.

keerthi Suresh

அதன்படி, பாஜக கேரளா மாநில குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, கேரள மாநில நடிகர்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேஜர் ரவி, தேவன் மற்றும் சுரேஷ்கோபி உள்ளிட்ட பல நடிகர்கள் பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

keerthi Suresh

இந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் பாஜக மாநில குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.