ப்பா.. வேற லெவல்தான்! நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்! அதுவும் யாருடன் பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!

ப்பா.. வேற லெவல்தான்! நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்! அதுவும் யாருடன் பார்த்தீர்களா! வைரல் வீடியோ!!


keerthi-suresh-dance-with-ramcharan-video-viral

 பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கீர்த்தி சுரேஷ் தற்போது குட்லக் சகி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

தில் ராஜு தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் இன்று தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிரமோஷன் விழா ஒன்று அண்மையில் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டுள்ளார்.

இந்தநிலையில், குட்லக் சகி படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்து கூறிய ராம் சரண், பின்னர் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்று செம ஹிட்டாகி வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்நிலையில் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.