முதல் படமே செம ஹிட்! கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதியின் ரீல் மகள்!

முதல் படமே செம ஹிட்! கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்திய விஜய்சேதுபதியின் ரீல் மகள்!


keerthi shetty increases her salary after first movie

தெலுங்கு சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் உப்பென்னா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்தார். 

இந்த படத்தில் புதுமுகங்களான வைஷ்ணவ் தேஜ் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் வில்லனாகவும், ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியின் அப்பாவாக, வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது.  மேலும் தனது முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தொடர்ந்து தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

keerthi shetty

அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து மகேஷ்பாபு, நானி போன்ற பல முன்னணி பிரபலங்களின் படங்களிலும் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி தனது சம்பளத்தை 2கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.