"உயரமா ஏதாச்சும் எடுத்துட்டு வாங்க" - செல்பி எடுக்க வந்த குள்ளமான நபரை கிண்டல் செய்த ரசிகர்..கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகை..! 

"உயரமா ஏதாச்சும் எடுத்துட்டு வாங்க" - செல்பி எடுக்க வந்த குள்ளமான நபரை கிண்டல் செய்த ரசிகர்..கோபத்தில் கொந்தளித்த பிரபல நடிகை..! 


keerthi sanon angry

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் கீர்த்தி சனோன். இவர் சிறந்த கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வருவதால் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இவரது நடிப்பு திறமைக்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார். அதிலும் இவர் நடித்த தில்வாலே, ஹவுஸ்புல் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. 

அது மட்டுமில்லாமல் நடிகர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக "நேனொக்கடே" என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த "மிமி" படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பரம சுந்தரி பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது.

actress keerthi

இந்த நிலையில், செல்பி எடுக்க வந்த மர்மநபர் செய்த செயலால் நடிகை கீர்த்தி சனோன் ஷாக்காகி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே நடிகர், நடிகைகள் பொதுஇடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க பெரிய ரசிகர் கூட்டமே திரண்டு வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி செல்பி எடுக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

சமீபத்தில் கீர்த்தி சனோன் பொது இடத்திற்கு சென்றபோது அவரை காண ரசிகர்களின் கூட்டம் திரண்டு இருந்தது. போட்டோ எடுக்க பல போட்டோகிராபர்களும் கூடியிருந்த நிலையில், ஒரு குள்ளமான நபர் நடுவில் புகுந்து கீர்த்தி சனோனுடன் செல்பி எடுக்க வந்தார். அவரை அங்கிருந்த நபர், "வேறு ஏதாவது உயரமாக எடுத்து வாருங்கள்" என கிண்டல் செய்தார். 

இதனை கேட்ட நடிகை கீர்த்தி சனோன், "ஏய் எதற்கு அப்படி சொல்றீங்க?" என கூறியதோடு அந்த நபரை அருகில் வரவழைத்து கீழே அமர்ந்து போனை வாங்கி செல்பி எடுத்தார். மேலும் அந்த நபர் தன்னிடம் இருந்த கூலிங் கிளாஸை போட்டுக்கொண்டு இன்னொரு செல்பி எடுங்க என்று கூறியதும், நடிகை மிகவும் ஷாக் ஆகிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.