சினிமா

அடப்பாவமே..நடிகர் அருண்பாண்டியனுக்கு வரிசையா இவ்வளவு சோதனையா! வேதனையுடன் பகிர்ந்த அவரது மகள் கீர்த்தி!!

Summary:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்த அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தனது அப

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வந்த அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் தனது அப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறித்தும், அதன் பிறகு அவர் அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர், ஒருநாள் இரவு எனது அப்பாவிற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. தூங்க முடியவில்லை என்றார். பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவரை திருநெல்வேலியில் வீட்டில் தனிமைபடுத்தினோம். முதல் ஏழு நாட்கள் மருத்துவர் ஆலோசனைப்படி அவர் சிகிச்சை பெற்றார். அப்பாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மிகவும் பயந்துட்டோம். ஆனால் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் அதிகளவு பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

கொரோனா சரியானதும் இதயப் பிரச்சனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றோம், அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு, 90 சதவீதம் தீவிரமடைந்து இருந்தது. அதனால் அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.  அப்போதுதான் கொரோனாவிலிருந்து மீண்டிருந்தாலும் அப்பா வலிமையுடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 2.5 மணி நேர சிகிச்சைக்கு பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த தொற்று காலத்தால் எங்களால் அப்பாவோடு இருக்க முடியவில்லை. பக்கத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் சமூக விலகலை பின்பற்றினோம். 
    
ஆனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் எனது அப்பாவை நன்றாக பார்த்துக்கொண்டனர். தற்போது எனது சூப்பர் ஹீரோ அப்பா நலமாக உள்ளார். மனரீதியாகவும் அப்பா உறுதியாக உள்ளார். நமது குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சிறிய அறிகுறிகள் தென்பட்டாலும் அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது முக்கியம். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement