சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்.!?

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்.!?


keerthi-pandian-viral-post-XRBZPL

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி பாண்டியன். இவர் தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழில் முதன் முதலில் 'தும்பா' படத்தின் மூலம் அறிமுகமானார்.

keerthi

இப்படத்திற்கு பின்பு அன்பிற்கினியாழ், சவாலே சமாளி போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கண்ணகி' திரைப்படம் ஓர் அளவிற்கு வெற்றி பெற்று மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.

மேலும் இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரும் வாழ்த்து கூறிய கமெண்ட் செய்து வந்தனர். இவ்வாறு சினிமா வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிசியாக இருந்து வருகிறார் கீர்த்தி பாண்டியன்.

keerthi

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது சேலையில் போட்டோ சூட் செய்து அதனை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.