ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
"என் தோற்றத்தைப் பற்றிப் பேசாதீங்க" மனம் வருந்திய கீர்த்தி பாண்டியன்.!
2019ம் ஆண்டு ஹரிஷ் ராம் இயக்கத்தில் "தும்பா" என்ற திரைபபடத்தில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இதையடுத்து 2021ம் ஆண்டு கோகுல் இயக்கிய "அன்பிற்கினியாள்" என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளாவார்.
கடந்த செப்டம்பர் மாதம் கீர்த்தி பாண்டியனுக்கும், நடிகர் அஷோக் செல்வனுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அசோக் செல்வன் நடித்துள்ள "சபாநாயகன்" திரைப்படமும், கீர்த்தி நடித்துள்ள "கண்ணகி" திரைப்படமும் வரும் டிசம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, "நான் பிரபலமாக இருப்பதால் என் மீது பல விமர்சனம் வருகிறது. என்னை விமர்சிப்பவர்கள் நிச்சயம் ஏதாவது கஷ்டத்தில் இருப்பார்கள்.
அவர்கள் வலியை என் மீது திணிக்க முயற்சிக்கிறார்கள். இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சனை. சிறு வயதிலேயே என் தோற்றத்தை குறித்த கமெண்டுகளை கேட்டு வீட்டுக்குள் சென்று கதறி அழுதிருக்கிறேன். என்னை விமர்சிப்பவர்கள் சீக்கிரம் குணமாக வேண்டும்" என்று கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார்.