அடேங்கப்பா! நம்ம பிக்பாஸ் கவினுக்கு இப்படியொரு பேரதிர்ஷ்டமா? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அடேங்கப்பா! நம்ம பிக்பாஸ் கவினுக்கு இப்படியொரு பேரதிர்ஷ்டமா? உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!


kavin-got-first-place-in-best-famous-televison-celebrit

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீசன் 3யில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் கவின். இவருக்கென  ஆர்மியெல்லாம் உருவாகியது

கவின் அதற்கு முன்னராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.மேலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதன் பிறகு பிக்பாஸில் கலந்துகொண்ட அவர்  லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டு சர்ச்சையில் சிக்கினார். இவர்களின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை சம்மதம் தெரிவிக்காததால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் பேசாமல், பார்க்காமல் இருந்து வருகின்றனர்.

kavin

இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த டிவி பிரபலம் ஆண்கள் பட்டியலில் ரசிகர்களின் அன்பை அதிகம் பெற்று பிக்பாஸ் கவின் முதலிடத்தில் உள்ளார். இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் கவின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் வாழ்த்து கூறி புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.