கடாரம் கொண்டான் படத்தின் முதல் 4 நாள் சென்னை மாஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.Kataram kondam movie first 4 days collection report

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். படத்தின் கதைக்காக தன்னை மிகவும் வருத்திக்கொண்டு கதைக்கு ஏற்றாற்போல் தனது உடம்பை மாற்றி மாற்றி நடிக்கும் நடிகர் இவர். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரம் சமீபத்தில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில், விக்ரம் நடிக்க கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் கடாரம் கொண்டான். பெரிய பார்ப்புக்கு இடையே வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

Kataram kondan

படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் எல்லா இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் நிலவரம் குறித்த செய்தி ஓன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, படம் திங்கட்கிழமை சென்னையில் மட்டும் ரூ. 16 லட்சம் வசூலித்துள்ளது. மொத்தமாக 4 நாள் சென்னை வசூல் என்றால் ரூ. 1.73 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.