பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயரை கூறாததற்கு காரணம் இதுதான்!. ஓப்பனாக பேசிய கஸ்தூரி!.

தற்போது "மீ டூ" விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் ‘‘உங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறியிருந்தீர்களே அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை? காரணம் தயக்கமா? என கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கஸ்தூரி, தயக்கமெல்லாம் இல்லை அவர்கள் மீது உள்ள பரிதாபம் தான். ஏற்கனவே என்னிடம் செருப்படி வாங்கிக்கொண்டு இன்றுவரை பொது இடத்தில் என்னை பார்க்கும்போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்புகிற சிலர்.
இறந்து விட்ட ஒருவர். இழுத்துக்கொண்டு ஒருவர். இவர்களை பற்றி இப்போது பேசுவதற்கு எனக்கே பாவமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தயக்கமில்லை. பரிதாபம்.
— Kasturi Shankar (@KasthuriShankar) 21 October 2018
ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காதமாதிரி மழுப்பற சிலர்.
இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக்கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு.