சினிமா

நயன்தாராவிற்கு போட்டியா? புதிய அவதாரமெடுக்கும் நடிகை கஸ்தூரி! வைரலாகும் புகைப்படத்தால் வாயடைத்துபோன ரசிகர்கள்!

Summary:

நடிகை கஸ்தூரி அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கஸ்தூரி. இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறையில் களமிறங்கிய அவர் சில படங்களில் குத்தாட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு, தான் அம்மன் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

மேலும் புதிய படமொன்றில் கஸ்தூரி அம்மன் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகை நயன்தாரா தற்போது  மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement