தமிழா தமிழாவில் இருந்து விலகுகிறேன் - கரு. பழனியப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நீயா? நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி, அந்நிகழ்ச்சியை மக்களிடையே பெரிதும் ரசிக்க வைத்தவர் கோபிநாத். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கரு. பழனியப்பன் தலைமையில் தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி தொடங்கி சிறப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
தமிழா தமிழனை கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில், தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக கரு. பழனியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், "எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள்!!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.
தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட " தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...! சமூக நீதி , சுயமரியாதை , திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது! நன்றி. உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி! முத்தங்கள்! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் , விரைவில் சந்திப்போம்!!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.