சினிமா

பிரபல இளம் சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் பலி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

Summary:

Karnataka serial actress dead in accident

கர்நாடகா கூர்க் பகுதியை சேர்ந்தவர் மெபினா மைக்கெல். இவர்  பிரபல கன்னட தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்றார்.இதனை தொடர்ந்து அவர் தற்போது டிவி ஷோக்களில் மாடலாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மெபினா மைக்கெல் தனது தோழிகளுடன், கூர்க் அருகேயுள்ள தனது சொந்த ஊரான மடிக்கேரி பகுதிக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த டிராக்டரின் மீது படு பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பிரபல மாடல்  மெபினா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது தோழிகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எதிர்பாராத சம்பவம் மெபினாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement