தியேட்டரில் கட்டுப்பாடுகளுடன் ரிலீஸானது கர்ணன்!! ரசிகர்களின் கைத்தட்டல்களால் மிதக்கிறது திரையரங்கு.!

தியேட்டரில் கட்டுப்பாடுகளுடன் ரிலீஸானது கர்ணன்!! ரசிகர்களின் கைத்தட்டல்களால் மிதக்கிறது திரையரங்கு.!


karnan movie released

நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவந்த கர்ணன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை விட மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கர்ணன். பரியேறும் பெருமாள் எனும் எதார்த்தமான படைப்பை தந்துவிட்டு, தற்போது கர்ணன் எனும் படத்தின் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது கொரோனா பரவல் 2வது அலை காரணமாக நாளை முதல் 50% இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் கர்ணன் திரைபடம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் திட்டமிட்டபடி கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி தற்போது கர்ணன் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியான கர்ணன் ரசிகர்களின் கைத்தட்டல்களால் மிதக்கிறது. இதுகுறித்து கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கூறுகையில், தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுடன் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திரையிடப்படும் கர்ணனுக்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு அனைவரையும் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.