ஹீரோவாக அறிமுகமாகும் பாட்ஷா பட நடிகரின் மகன்! வெளியான சூப்பர் தகவல்! குவியும் வாழ்த்துக்கள்!

ஹீரோவாக அறிமுகமாகும் பாட்ஷா பட நடிகரின் மகன்! வெளியான சூப்பர் தகவல்! குவியும் வாழ்த்துக்கள்!


Kannada actor sasikumar son act in first movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே  மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் பாட்ஷா. இதில் ரஜினிக்கு தம்பியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சசிகுமார். இவர் கன்னடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். 

இந்நிலையில் நடிகர் சசிகுமாரின் மகன் அக்ஷித்  தற்போது சீதாயணம் என்ற படத்தில்  ஹீரோவாக நடிப்பதன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமாகிறார்.  பிரபாகர் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராக உள்ளது.

sasikumar

சீதாயாணம் திரைப்படத்தில் அக்ஷித்துக்கு ஜோடியாக அனாஹிதா பூஷன் என்பவர் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் வித்யுலேகா ராமன், விக்ரம் சர்மா, அஜய் கோஷ், பிட்டிரி சத்தி, ஹிடேஷ் ஷெட்டி, மது நந்தன், சுதர்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலர்வுட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் உபேந்திர குமாரின் மகன் பத்மநாப பரத்வாஜ்  இசையமைத்து வருகிறார்.