
சன் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவந்த பிரபல சீரியல் ஒன்று இன்று இரவோடு முடிவுக்கு வருகிறது.
சன் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவந்த பிரபல சீரியல் ஒன்று இன்று இரவோடு முடிவுக்கு வருகிறது.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் என்றால் அது மிகையாகாது. சிறுவர்கள் தொடங்கி, இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவர்க்கும் ஏற்றமாதிரி தொடர்களை வழங்கி, ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது சன் டிவி.
இந்நிலையில் சன் டிவியில் பல மாதங்களாக ஒளிபரப்பாகி, ரசிகர்களின் ஆதரவை பெற்றுவந்த கண்மணி தொடர் இன்று இரவுடன் முடிவு வருகிறது. இந்த தொடரில் நாயகனாக சஞ்சீவ் நடித்துவந்தார்.
தினமும் இரவு 10 மணி முதல் 10.30 வரை ஒளிபரப்பாகிவந்த கண்மணி தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கண்மணி தொடர் இன்றுடன் முடிவடையும்நிலையில் விரைவில் சன் டிவியில் புது சீரியல் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement