சினிமா

இடித்து தள்ளப்பட்ட மும்பை பங்களா! 2 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நடிகை கங்கனா!

Summary:

Kangana ranawat ask 2 crores for destroy her mumbai office

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் குற்றம்சாட்டினர். மேலும் சுஷாந்த்  தற்கொலைக்கு பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களின்  ஆதிக்கம் மற்றும் போதை பொருள் பழக்கம் போன்றவைதான் காரணம் என நடிகை கங்கணா குற்றம்சாட்டினார்.

மேலும் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், தாலிபான் தீவிரவாதிகளை போல ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனாவிற்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

 

 இந்நிலையில்  மும்பை மாநகராட்சி, பாந்திராவில் உள்ள கங்கனாவின் அலுவலக பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் நடந்ததாக கூறி, ஒரு பகுதியை இடித்து தள்ளியது. அதனை தொடர்ந்து இதற்கு எதிராக மும்பை ஐகோர்ட்டில் கங்கனா மனுதாக்கல் செய்தநிலையில், கட்டிடத்தை மேற்கொண்டு இடிப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தனது அலுவலகத்தை இடித்த மும்பை மாநகராட்சிக்கு எதிராக ரூபாய் 2 கோடி இழப்பீடு கேட்டு நடிகை கங்கனா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தனது அலுவலக கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்படவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பழிவாங்கும் உள்நோக்கத்தோடு இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Advertisement