சினிமா

நான் ஹ்ருத்திக் ரோஷனை உண்மையாதான் காதலிச்சேன்! ஆனா.. பிரபல முன்னணி நடிகையின் பதிவால் விளாசும் ரசிகர்கள்!

Summary:

Kangana ranavut tweet about sushanth love with sara alikhan

பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்த சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்,  சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பாலிவுட் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்தான் காரணம் என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் அவ்வப்போது  சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தியையும் கடுமையாக சாடி வந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது சுஷாந்தின் முன்னாள் காதலியான சாரா அலிகான் குறித்தும், தனது காதல் குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சுஷாந்த் சிங், சாரா அலிகான் காதல் குறித்து  ஏற்கனவே ஏராளமான  ஊடகங்களில் தகவல்கள் வந்துள்ளது. இந்த நட்சத்திர குழந்தைகள் ஏன் இப்படி வெளியிலிருந்து வரும் நடிகர்களை ஆசைக்காட்டி ஏமாற்றுகிறார்கள். மேலும் அதனை தொடர்ந்து சுஷாந்த் சிங் எதற்காக கழுகிடம் சிக்கி கொண்டார் என்பதில் ஆச்சர்யப்பட  எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் சாரா அலிகான் சுஷாந்த் சிங்கை உண்மையாக காதலித்திருக்கலாம் என நம்புகிறேன். மேலும் சாராவுக்கு ஏதேனும் அழுத்தம் ஏற்பட்டதால் அவர் விலகியிருக்கலாம். ஏனெனில் நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தற்போது எப்படி இவ்வாறு எதிரிபோல மாறினார் என்பது எனக்கே மர்மமாகவே உள்ளது  என்று கூறியுள்ளார். இவரது இந்த பதிவு வைரலான நிலையில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரித்திக் ரோஷனின் ரசிகர்கள் ஆவேசமாகி கங்கனாவை மோசமாக விமர்சித்தும் வருகின்றனர்.


Advertisement