பூதாகரமாகும் போதைப்பொருள் விவகாரம்! நாசூக்காக பிரபல முன்னணி நடிகர்களை கோர்த்துவிட்ட நடிகை கங்கணா!

பூதாகரமாகும் போதைப்பொருள் விவகாரம்! நாசூக்காக பிரபல முன்னணி நடிகர்களை கோர்த்துவிட்ட நடிகை கங்கணா!


Kangana call famous actors to take blood test

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திரையுலகில் வாரிசு அரசியல் அதிகாரத்தால்தான் மன உளைச்சலில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதனை தொடர்ந்து இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு நடிகை கங்கனா ரணாவத் வாரிசு நடிகர்கள், நடிகைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் மோசமாக விளாசி வந்தார். மேலும் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் அனைத்து பார்ட்டிகளிலும் போதைபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. போதை பொருள் தடுப்பு போலீசார்கள் பாலிவுட் உலகில் நுழைந்தால் பல பிரபலங்கள் சிறைக்கு செல்வார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிவரும் என கூறியிருந்தார்.

மேலும் அதனை தொடர்ந்து தற்போது ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி, விக்கி கவுஷிக் ஆகியோர் முன்வந்து போதைமருந்து பரிசோதனைக்கு தங்களது ரத்த மாதிரியைக் கொடுக்க வேண்டும். இவர்கள் கொக்கைன் அடிமைகள் என்று வதந்திகள் உள்ளது. அதனை அவர்கள் உடைக்கவேண்டும்.மேலும்  இவர்கள் சுத்தமாக இருந்தால் அதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்கலள் ஊக்கமடைவர் என பதிவிட்டு அதனை பிரதமரின் டுவிட்டர் பக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.