"கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு" - கமல் ஹாசன் வாழ்த்து!! Kamalhassan wishes on teachers day

இன்று ஆசிரியர்கள் தினம். இதனால் பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல் ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவினை வெளியிட்டுருந்தார் அதில் :-

"கல்விதான் சமூகத்தின் கலங்கரை விளக்கு. தமிழ்ச் சமூகம் எழுந்து நின்றதிலும் எழுச்சி பெற்றதிலும் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகம். 

நம் ஆளுமை உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் ஆசிரியப் பெருமக்களை ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறேன்." என்று தனது வாழ்த்தினை பதிவு செய்திருந்தார்.