பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறும் கமல்ஹாசன்?.. சோகத்தில் ரசிகர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறும் கமல்ஹாசன்?.. சோகத்தில் ரசிகர்கள்.!


Kamalhasan releave in bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் திடீரென விலகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் தற்போது 7வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg Boss 7

இந்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் போட்டியாளர் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதனால் கமல்ஹாசனை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது முன்னணி நடிகராக இருக்கும் கமல்ஹாசனுக்கு அவமானமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் பாதியில் வெளியேறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இனி வரும் சீசன்களில் தொகுத்து வழங்கப் போவதில்லை எனவும் கூறப்படுகிறது.