நடிகர் கமலின் 60 ஆண்டு திரையுலக வாழ்வை கொண்டாட நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி! எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?



Kamal special

நடிகர் கமல் அவர்கள் தனது ஐந்து வயது முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. மேலும் கமல் அவர்கள் இன்றும் இளமையுடன் காணப்படுகின்றார்.

மேலும் இவர் நடிகர் என்பதை தாண்டி சிறந்த தயாரிப்பாளராகவும், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். இந்நிலையில் தற்போது நடிகர் கமல் அவர்கள் 60 ஆண்டுகள் திரை உலகில் சாதித்ததை கௌரவிக்கும் விதமாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வருகின்ற நவம்பர் 7, 8, 9 தினங்களில் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

kamal

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விஜய் டிவி பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாம்.