பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்! அப்போ இந்த வாரம் வெளியேறப்போவது யார்?



Kamal saved mohan vaidya in bigg boss house

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கிவருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

16 பிரபலங்கள் போட்டியளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், மதுமிதா, பருத்திவீரன் சரவணன் ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

bigg boss tamil

இந்நிலையில் மோகன் வைத்யாதான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல் மோகன் வித்யாவை சேவ் செய்து பிக்பாஸ் வீட்டில் தங்கவைத்துவிட்டார்.

இதனால் மீதமுள்ள நான்கு பேரில் நாளை வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.