அட.. வேற லெவல் ஆண்டவரே! சும்மா நச்சுனு கமல் கொடுத்த அன்பு பரிசு! செம குஷியில் பிரபலங்கள்!!

அட.. வேற லெவல் ஆண்டவரே! சும்மா நச்சுனு கமல் கொடுத்த அன்பு பரிசு! செம குஷியில் பிரபலங்கள்!!


kamal-kissing-vikram-actors-photos-viral

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கியுள்ள திரைப்படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர் சூர்யா கடைசி மூன்று நிமிடங்கள் வந்து மாஸ் காட்டியுள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 300 கோடிக்கும் மேல்  வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

kamal

இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படக்குழுவினரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோருக்கு நச்சென முத்தத்தை பரிசாக கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.