ஸ்ருதிஹாசனின லைவில் கமலஹாசன் செய்த செயல்.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

ஸ்ருதிஹாசனின லைவில் கமலஹாசன் செய்த செயல்.. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!


kamal-hasan-joined-shuruthi-live-in-instagram

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடித்து வந்த் கமலஹாசன் தனது நடிப்பு திறமையின் மூலம் தற்போது வரை தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார்.

kamal

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் உச்சத்தில் இருக்கும் கமலஹாசன், சில வருடங்களாக இவர் நடித்த திரைப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்த 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.

இப்படம் இவருக்கு ஒரு மைல் கல்லாகவே அமைந்தது என்று கூட சொல்லலாம். இதனை அடுத்து தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமலஹாசன். இது போன்ற நிலையில் தனது மகளான ஸ்ருதிஹாசன் லைவில் கமலஹாசன் செய்த செயல் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

kamal

ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் தனது தந்தையின் திரைப்படமான விக்ரம் திரைப்படத்தின் ஒரு லைனை பாடியிருக்கிறார். இந்த பாடலில் கமல்ஹாசனும் கலந்துகொண்டு கூடவே சேர்ந்து பாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.