"ஏன் வில்லனாக நடிக்கிறேன்.?" என்பதற்கு கமல்ஹாசன் அளித்த தெளிவான விளக்கம்.!

"ஏன் வில்லனாக நடிக்கிறேன்.?" என்பதற்கு கமல்ஹாசன் அளித்த தெளிவான விளக்கம்.!kamal-haasan-gave-a-clear-explanation-as-to-why-he-is-p

இயக்குனர் நாகாஸ்வினி இயக்கத்தில்  ப்ராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்ட திரைப்படத்திற்கு தற்போது கல்கி 2898 ஏடி என பேரிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் உலக நாயகன் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பத்தாணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tamil cinemaதென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும்  உருவாக இருக்கும் இந்த திரைப்படம்  பான் இந்தியா சினிமாவாக  உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படத்திற்கான பெயர் அறிவிப்பு விழா மற்றும்  நடிகர் நடிகைகள் அறிமுக நிகழ்ச்சி  அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்றது.

tamil cinemaஇந்த நிகழ்ச்சியில் தான் படத்திற்கான பெயர் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் தான் ஏன் வில்லனாக நடிக்கிறேன் என்பது குறித்து பேசி இருக்கிறார். இது பற்றி குறிப்பிட்டுள்ள அவர் ஒரு வில்லன் சிறப்பாக இருந்தால்தான் அவனை வென்று கதாநாயகன் சிறப்பானவனாக வெற்றி பெற முடியும். அதனால் எந்த ஒரு திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரம் என்பது மிகவும் முக்கியம் என தெரிவித்திருக்கிறார்.