பிரபாஸ்க்கு விஜய் பட டைட்டில்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபாஸ்க்கு விஜய் பட டைட்டில்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



Kalki 2898 AD movie prabhas character

தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். 

Kalki 2898 AD

மேலும், இப்படத்திற்கு பிறகு அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் பான் இந்தியா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் திரைப்படம் படுதோல்வியை சந்தித்து.

Kalki 2898 AD

தற்போது நடிகர் பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு ஸ்பிரிட் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்கி 2898 ஏடி படத்தில் நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்திலன் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.