சினிமா

இதெல்லவா நட்பு! ஜீவா மற்றும் அருள்நிதி செம மாஸ் காட்டும் களத்தில் சந்திப்போம்! டிரெண்டாகும் பட டீசர்!

Summary:

ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் களத்தில் சந்திப்போம் படத்தின் டிரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

ஆர்பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மாப்ள சிங்கம் படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 

மேலும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், ஜீவாவிற்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் நடித்துள்ளனர்.  மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், ஆடுகளம் நரேன், பாலசரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் களத்தில் சந்திப்போம் படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடிக்கும் இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அதனை இதுவரை 4 லட்சம் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். இந்நிலையில் களத்தில் சந்திப்போம் பட ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement