"இரண்டாம் திருமணம் செய்துகொண்டேன்" நடிகை காஜல் பசுபதியின் வைரலாகும் பதிவு..Kajal pasupathi post about her marriage

சன் மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாக அறிமுகமானவர் காஜல் பசுபதி. இதைத் தொடர்ந்து சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 2006ம் ஆண்டு சசி இயக்கிய "டிஷ்யூம்" படத்தில் இவர் சந்தியாவின் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

kajal

தொடர்ந்து கோ, சிங்கம், சுப்ரமணியபுரம், கள்வனின் காதலி, மௌன குரு, மாயை, என்னமோ நடக்குது, இரும்புக்குதிரை, பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர், கலகலப்பு 2, ஒன்றா இரண்டா ஆசைகள், கத்தி, கிச்சி கிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் பணியாற்றிய போது நடன இயக்குனர் சாண்டியுடன் காதல் ஏற்பட்டு அவருடன் லிவ் இன் உறவில் இருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஜோடி பிரிந்ததையடுத்து சாண்டி, சில்வியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

kajal

இதுவரை தனியாக வசித்து வந்த காஜல், தற்போது கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "ஒருவழியாக இரண்டாம் திருமணம் செய்துவிட்டேன். உங்களுக்கும் இது மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். இது திடீரென எடுத்த முடிவு. விரைவில் உங்களை சந்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.