சினிமா

சாண்டியோட மனைவி என்னால கஷ்டப்படுறாங்களா? ரசிகரின் கேள்விக்கு காஜல் என்ன பதிலடி கொடுத்துள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

kajal answered to netisans about sandy

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

மேலும் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்குள் போட்டியாளர்களும் ஒருவராக இருப்பவர் சாண்டி.  இவர் எப்பொழுதும் கலகலப்பாக இருக்ககூடியவர் மேலும் ஆடல், பாடல் என தன்னை சுற்றியிருக்கும் அனைவரையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளக்கூடியவர். 

இவரது முதல்மனைவி நடிகை காஜல் பசுபதி. காதல்திருமணம் செய்து கொண்ட இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டநிலையில், சாண்டி சில்வியா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது.

 இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் காஜல் பிக்பாஸ் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சாண்டி குறித்து யாராவது தவறாக பேசினால் அவர்களுக்கு கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார். 

bigboss kajal க்கான பட முடிவு

 இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன் நீங்கள் அதனை பின்பற்றுங்கள், நீங்கள் அதிக அளவு அன்பு, அக்கறை வைத்திருக்கிறீர்கள். ஆனால் சாண்டிக்கு  இரண்டாவதாக வாழ்க்கை அமைந்து விட்டது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்கள்  அன்பால் அவரது மனைவி வருத்தப்படமாட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்நிலையில் காஜல் அதற்கு பதிலடி கொடுத்து, தான் இவ்வாறு இருப்பதால் சாண்டியின் மனைவி மனசு புண்படுகிறதா என அவரிடம் போய்க் கேளுங்கள். நீங்கள் விரும்பும் வழியில் அவர் பதில் அளிக்க மாட்டார். எங்கள் இருவருக்கும்  நல்ல உறவு இருக்கிறது அவர் எப்போதும் உங்களைப் போல என்னை நினைத்தது இல்லை. கற்பனையை நிறுத்திக் கொள்ளுங்கள் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக ஏதாவது கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.


Advertisement